/உள்ளூர் செய்திகள்/தேனி/செங்கல் வாங்குவதை நிறுத்திய கேரள கட்டுமான நிறுவனங்கள் சூளை உரிமையாளர்கள் கலக்கம்செங்கல் வாங்குவதை நிறுத்திய கேரள கட்டுமான நிறுவனங்கள் சூளை உரிமையாளர்கள் கலக்கம்
செங்கல் வாங்குவதை நிறுத்திய கேரள கட்டுமான நிறுவனங்கள் சூளை உரிமையாளர்கள் கலக்கம்
செங்கல் வாங்குவதை நிறுத்திய கேரள கட்டுமான நிறுவனங்கள் சூளை உரிமையாளர்கள் கலக்கம்
செங்கல் வாங்குவதை நிறுத்திய கேரள கட்டுமான நிறுவனங்கள் சூளை உரிமையாளர்கள் கலக்கம்
ADDED : பிப் 25, 2024 05:09 AM
கம்பம் : கம்பம் பகுதியில் இருந்து செங்கல் வாங்குவதை கேரள கட்டுமான நிறுவனங்கள் நிறுத்தியதால் செங்கல் சூளை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கம்பத்தில் 50 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருந்தது. பல்வேறு காரணங்களால் 20 க்கும் மேற்பட்ட சூளைகள் மூடப்பட்டுள்ளன. மூலப்பொருள்கள் விலை உயர்வு உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு, கூலி உயர்வு போன்ற காரணங்களால் சூளைகள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன . இந்நிலையில் தற்போது ஆயிரம் செங்கல் விலை ரூ.6 ஆயிரம் வரை விலை உள்ளது . ஆனால் விலை கட்டுபடியாகாது என்கின்றனர்.
இந்நிலையில் விற்பனையும் மந்தமாக உள்ளது. இதற்கான காரணம் குறித்து சூளை உரிமையாளர்கள் கூறுகையில், முன்பு கேரளாவில் இருந்து தினமும் ஆர்டர்கள் கிடைக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 50 க்கும் அதிகமான டிப்பர் லோடு செங்கல் கேரளா கட்டுமான நிறுவனங்கள் வாங்கும். சமீபத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் நமது செங்கலை வாங்குவதை நிறுத்தி விட்டனர். ஹாலோ பிளாக் எனப்படும் சிமிண்ட் கற்களை வைத்து கட்டடங்களை கட்டுகின்றனர். ஹாலோ பிளாக் கற்களுக்கு மணல் தேவைப்படாது . செங்கல் என்றால் மணல் தேவைப்படும், மேலும் இங்கிருந்து லாரிகளில் கொண்டு செல்லும் போது வரி விதிக்கப்படுகிறது.
குறிப்பாக கேரள வங்கிகளில் ஹாலோ பிளாக் வைத்து கட்டும் கட்டடங்களுக்கு கடன் தருவதாகவும், செங்கல் கட்டடங்களுக்கு கடன் தர தயங்குவதாகவும் தகவல் உள்ளது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதனால் செங்கல் வாங்குவதை கேரளாவை சேர்ந்தவர்கள் முழுமையாக நிறுத்தி விட்டனர் என்கின்றனர்.
கேரளாவை சேர்ந்தவர்கள் செங்கல் வாங்க வராததால் விற்பனையில் மந்த நிலை உள்ளது என்று கவலையுடன் கூறுகின்றனர்.