ADDED : ஜன 13, 2024 01:31 AM

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் கதம்ப வண்டு கொட்டியதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்த தோட்ட காவலாளி பெரியகருப்பன் 65. நேற்று தோட்டத்தில் வேலை முடித்து விட்டு மயானம் செல்லும் ரோடு வழியாக வீட்டுக்கு திரும்பினார்.
காலை 11:30 மணிக்கு தோட்டத்தில் இருந்து பறந்து வந்த கதம்பவண்டு பெரியகருப்பனை கொட்டியது.
அடுத்தடுத்து பறந்து வந்த வண்டுகள் அந்த வழியாக வந்த முருகேஷ்வரி 65, ஜவஹர் சாதிக் 55, இவரது மனைவி சையதுஅலி பாத்திமா 46,வை கொட்டியது. காயமடைந்த நான்கு பேரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு பெரியகருப்பன் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.