/உள்ளூர் செய்திகள்/தேனி/ 18 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெறும் கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி 18 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெறும் கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி
18 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெறும் கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி
18 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெறும் கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி
18 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெறும் கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி
ADDED : மே 20, 2025 01:35 AM

கம்பம்: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி 18 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்து சாதனை படைத்து வருகிறது.
கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக இச் சாதனை தொடர்கிறது. இந்தாண்டு இப் பள்ளி மாணவி அக்ஷிதா 500க்கு 492 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். மாணவி கவியாழினி 484, பிரகதீஷ் 479, ஷர்வேஸ் 477, கனிஷ்கா 476 மதிப்பெண்கள் பெற்று முதல் ஐந்து இடங்களை பள்ளி அளவில் பெற்றனர்.
அறிவியலில் 3 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். சமூக அறிவியலில் 3 பேர், தமிழில் ஒருவர் நூற்றுக்கு 99 மதிப்பெண் பெற்றனர். தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 17 பேர் 450க்கு மேலும், 8 பேர் 400க்கு மேலும் மதிப்பெண் பெற்றனர்.
சாதனை மாணவ மாணவிகளை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடைபெற்றது.
தாளாளர் முனைவர் விஸ்வநாதன், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி, 'அடுத்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
நிகழ்ச்சியில், முதல்வர் மோகன், துணை முதல்வர் மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சாதனைக்கு காரணமான பத்தாம் வகுப்பு ஆசிரியைகள் நிர்மலா, ராதிகா, பிரவீனா, சண்முகப்ரியா ஆகியோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.