/உள்ளூர் செய்திகள்/தேனி/காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் முகூர்த்த கால் : மார்ச் 20ல் மகா கும்பாபிஷேகம்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் முகூர்த்த கால் : மார்ச் 20ல் மகா கும்பாபிஷேகம்
காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் முகூர்த்த கால் : மார்ச் 20ல் மகா கும்பாபிஷேகம்
காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் முகூர்த்த கால் : மார்ச் 20ல் மகா கும்பாபிஷேகம்
காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் முகூர்த்த கால் : மார்ச் 20ல் மகா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 12, 2024 05:46 AM

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் மார்ச் 20ல் மகா கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
உத்தமபாளையத்தில் பழமையான காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் உள்ளது. தென் காளஹஸ்தி என்றழைக்கப்படும் இக்கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இங்கு ராகு, கேது தனித் சன்னதிகளில் தம்பதியர் சகிதமாக எழுந்தருளி உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00 முதல் 6:00 மணிக்குள் ராகு காலத்தில் பரிகார பூஜைகள் நடக்கின்றன.
இக்கோயிலில் 2004ல் திருப்பணி செய்யபட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் திருப்பணி நடைபெறவில்லை. 2020ல் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் வங்கி அதிகாரி சண்முகம் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் துவங்கியது.
முன்னாள் முதல்வர் ஒ.பி.எஸ்., மகன் ஜெயபிரதீப், கம்பம் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் சேர்மன் பாஸ்கர் பெரும்பாலான பணிகளை செய்தனர். இதர பணிகளை இதர உபயதாரர்கள் செய்திருந்தனர்.
கொரானா காலத்தில் பணிகள் தடைபட்டது. பின் தொடர்ந்து பணிகள் நடைபெற்று மார்ச் 20ல் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. முன்னதாக அஷ்ட பந்தன பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோயிலுக்குள் இருந்து அலங்கரிக்கப்பட்ட முகூர்த்த கால் பக்தர்களால் தூக்கி வரப்பட்டு, வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க காலை 9:40 மணியளவில் பக்தங்களால் முகூர்த்த கால் ஊன்றப்பட்டது.
இந்நிகழ்வில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், முன்னாள் திருப்பணிக் குழு தலைவர் சண்முகம், உறுப்பினர் செல்வம், பேரூராட்சி தலைவர் காசிம், வக்கீல் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.