ADDED : ஜன 26, 2024 06:16 AM

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கோயிலில் தைப்பூச ஜோதி தரிசன விழா அகவல் பாராயணம், கொடியேற்றுடன் துவங்கியது.
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பிரார்த்தனை நடந்தது 'பசிப்பிணி மருத்துவர் வள்ளலார்' என்ற தலைப்பில் ஆசிரியர் சித்தேந்திரன் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இங்கு ஆண்டு முழுவதும் மதியம் 1:00 மணி அளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தலைவர் ரத்தினவேல், சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞானசபை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


