நிச்சயதார்த்ததில் நகை, பணம் மாயம்
நிச்சயதார்த்ததில் நகை, பணம் மாயம்
நிச்சயதார்த்ததில் நகை, பணம் மாயம்
ADDED : செப் 17, 2025 03:37 AM
மூணாறு : மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகளுக்கு செப்.15ல் நிச்சயதார்த்தம், பழைய மூணாறில் உள்ள தனியார் தேயிலை கம்பெனிக்கு சொந்தமான ஹாலில் நடந்தது.
அந்த நிகழ்ச்சிக்கு முன்பு மணமகள் கைப்பையில் வைத்திருந்த நகைகளை அணிய சென்றார். கைப் பையை திறந்து பார்த்தபோது ஒரு பவுன் வீதம் ஆறு தங்க வளையல்களில் இரண்டு, ரூ.1.10 லட்சம் பணத்தில் ரூ.27 ஆயிரம் ஆகியவை மாயமானதால் அதிர்ச்சி அடைந்தனர். ஹால் முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. நிச்சயதார்த்தம் முடிந்த பின் முனியாண்டி போலீசில் புகார் அளித்தார். மூணாறு போலீசார் ஹாலில் பொறுத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு நடத்தி விசாரிக்கின்றனர்.