/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியகுளம் - தேனி இடையே லொட, லொடா ரோடால் சிரமம் பெரியகுளம் - தேனி இடையே லொட, லொடா ரோடால் சிரமம்
பெரியகுளம் - தேனி இடையே லொட, லொடா ரோடால் சிரமம்
பெரியகுளம் - தேனி இடையே லொட, லொடா ரோடால் சிரமம்
பெரியகுளம் - தேனி இடையே லொட, லொடா ரோடால் சிரமம்
ADDED : செப் 17, 2025 03:43 AM

பெரியகுளம் : பெரியகுளம் - தேனி ரோட்டில் கைலாசபட்டி முதல் மாவட்ட நீதிமன்றம் வரை ரோட்டின் மையப்பகுதி பல இடங்களில் சேதமடைந்து வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
பெரியகுளம் - தேனி ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் டூவீலர் முதல் கனரக வாகனங்கள் வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. முக்கியத்துவமான இந்த ரோடு கைலாசபட்டி முதல் லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் வரை 4 கி.மீ., தூரம் வரை ரோட்டின் மையப்பகுதி பல இடங்களில் பள்ளங்கள் உருவாகி மேடு, பள்ளங்களாக உள்ளன. இதனால் இந்த லொட, லொடா ரோட்டில் டூவீலரில் செல்வோர் விழுந்து சிரமம் அடைகின்றனர். சில தினங்களுக்கு முன் பெரியகுளம் பகுதி போலீசார் ஒருவர், மாவட்ட நீதிமன்றத்திலில் விசாரணை முடிந்து பெரியகுளம் நோக்கி செல்லும் போது, சருத்துப்பட்டி ரோட்டில் சறுக்கி நூழிலையில் தப்பினார்.
இந்தப்பகுதியில் ரோடு அமைத்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சேமதடைந்த பகுதிகளில் பராமரிப்பு இல்லை. ஏதாவது பெரிய அளவிலான அசம்பாவிதம் நடப்பதற்குள் பெரியகுளம் நெடுஞ்சாலை துறை நிர்வாகம் ரோடு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.