/உள்ளூர் செய்திகள்/தேனி/ரூ.1 கோடியில் வளர்ச்சிப்பணி செய்தும் பூங்காவை பயன்படுத்த அனுமதிக்காத அவலம்ரூ.1 கோடியில் வளர்ச்சிப்பணி செய்தும் பூங்காவை பயன்படுத்த அனுமதிக்காத அவலம்
ரூ.1 கோடியில் வளர்ச்சிப்பணி செய்தும் பூங்காவை பயன்படுத்த அனுமதிக்காத அவலம்
ரூ.1 கோடியில் வளர்ச்சிப்பணி செய்தும் பூங்காவை பயன்படுத்த அனுமதிக்காத அவலம்
ரூ.1 கோடியில் வளர்ச்சிப்பணி செய்தும் பூங்காவை பயன்படுத்த அனுமதிக்காத அவலம்
ADDED : பிப் 06, 2024 12:26 AM
கம்பம் : கம்பத்தில் ரூ.1 கோடி வரை செலவழித்து பல ஆண்டுகளை கடந்தும் நகராட்சி பூங்காவை பயன்படுத்தாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கம்பம் நகரில் மையப் பகுதியில் காந்திஜி பூங்கா உள்ளது.
இதில் முதியோர், பெண்கள், சிறவர்களும் மாலையில் அமர்ந்து ரிலாக்ஸ செய்வார்கள். இங்குள்ள படிப்பகத்தில் நாளிதழ்கள் நகராட்சி வாங்கி போடப்பட்டிருக்கும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தைக்கென பூங்காவின் பாதி இடத்தை எடுத்துக் கொண்டார்கள். அன்றிலிருந்தே பூங்கா களையிழந்தது. ஐந்து ஆண்டுகளுக்கும் முன்பு ரூ.35 லட்சம் செலவில் பூங்கா புதுப்பிக்கப்பட்டது.
அதன் பின் சில ஆண்டுகள் கழித்து வாசலை மறைத்து கலையரங்கம் கட்டினர். பின் நுழைவு வாயில் படி கிழக்கு பக்கம் மாற்றி வைக்கப்பட்டது. பின்னர் ரூ. 26 லட்சம் செலவில் யோகா மண்டபம் கட்டப்பட்டது. அதன் பின் ரூ.39 லட்சம் செலவில் விளையாட்டு உபகரணங்கள், காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டது என ரூ.1 கோடி வரை செலவழித்தும் கடந்த பல ஆண்டுகளாக காந்திஜி பூங்கா பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
பூங்காவை பூட்டி வைத்துள்ளதற்கான காரணத்தை நகராட்சி இதுவரை கூற வில்லை. சம்பந்தப்பட்ட மண்டல இயக்குநர் இந்த பூங்காவை ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.