ADDED : மே 20, 2025 01:33 AM
தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் முனைவோர் முன்னேற்றம், புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். திட்டம் பற்றி துறை உதவி இயக்குநர் கலைச்செல்வி விளக்கினார். பயிற்சியாளர், தர்மதுரை, மாவட்ட திட்ட மேலாளர் சுந்தரேஸ்வரன், ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.