/உள்ளூர் செய்திகள்/தேனி/தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வுதேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வு
தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வு
தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வு
தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வு
ADDED : பிப் 12, 2024 05:49 AM

ஆண்டிபட்டி: வெளியூர் வியாபாரிகள் வருகை, தேவை அதிகரிப்பால் ஆண்டிபட்டியில் வாழை இலை விலை திடீரென உயர்ந்தது.
ஆண்டிபட்டியில் வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கரட்டுப்பட்டி, ஸ்ரீரங்கபுரம், அய்யணத்தேவன்பட்டி, புதூர், வெள்ளையத்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, குண்டலப்பட்டி, புள்ளிமான்கோம்பை கிராமங்களில் பல ஏக்கரில் வாழை சாகுபடி உள்ளது. இப்பகுதியில் பறிக்கப்படும் வாழை இலை உள்ளூர் தேவைக்கும் மதுரை, சென்னை உட்பட வெளியூர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த சில நாட்களாக ரூ.500 முதல் 700 வரை இருந்த வாழை இலை கட்டு நேற்று திடீரென 3 மடங்கு வரை விலை உயர்ந்தது. விலை உயர்வால் வியாபாரிகளுக்கே அதிக லாபம் கிடைப்பதாக வாழை இலை விளைவிக்கும் விவசாயிகள் புலம்புகின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், '36 மடிகள் கொண்ட சிறிய ரக கட்டு ரூ.500 முதல் 700 வரையும், நடுத்தர கட்டு ரூ.900 முதல் 1200 வரையும், பெரிய கட்டு ரூ.1500 முதல் 1700 வரையும் விலை இருந்தது. சென்னையில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து தினமும் 200 கட்டுக்கள் வரை சென்னைக்கு அனுப்புகிறோம்.', என்றனர்.