ADDED : பிப் 25, 2024 04:10 AM
கம்பம் : கம்பம் வாரச் சந்தை 2022 ல் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் ரூ.7.75 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. புதிதாக 265 கடைகள், கழிப்பறைகள், ஒய்வறை, வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டது.
நேற்று காலை தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் வனிதா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் வாசுதேவன், அட்வகேட் துரை நெப்போலியன், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
துணை தலைவர் சுனோதா, கொள்கை பரப்பு இணை செயலாளர் பாண்டியன் , தி.மு.க. நகர் செயலாளர் பால்பாண்டி ராஜா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.