/உள்ளூர் செய்திகள்/தேனி/நவீன விசைத்தறிகள் உற்பத்தியால் கைத்தறி ஜவுளிகள் தாக்குப் பிடிக்க முடியலநவீன விசைத்தறிகள் உற்பத்தியால் கைத்தறி ஜவுளிகள் தாக்குப் பிடிக்க முடியல
நவீன விசைத்தறிகள் உற்பத்தியால் கைத்தறி ஜவுளிகள் தாக்குப் பிடிக்க முடியல
நவீன விசைத்தறிகள் உற்பத்தியால் கைத்தறி ஜவுளிகள் தாக்குப் பிடிக்க முடியல
நவீன விசைத்தறிகள் உற்பத்தியால் கைத்தறி ஜவுளிகள் தாக்குப் பிடிக்க முடியல
மானியம் நிறுத்தம்
ஜவுளி தொழிலில் தாராளமயமாக்கல் கொள்கையால் கைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளிகளுக்கு போட்டியாக நவீன விசைத்தறிகளில் உற்பத்தி துவங்கியது. கூடுதலான உற்பத்தி, குறைவான அடக்க விலையால் கைத்தறியில் உற்பத்தி செய்த ஜவுளிகள் மார்க்கெட்டில் போட்டியை தாக்கு பிடிக்க முடியவில்லை.
கைவிட்டு செல்லும் தொழில்
கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: 50 முதல் 60 வயதை கடந்த சிலர் மட்டும் வேறு வழி இன்றி இத்தொழில் செய்யும் நிலையில் உள்ளனர். சக்கம்பட்டியில் கைத்தறிகள் அகற்றப்பட்டு பெடல் தறிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. நுட்பமான வேலை, குறைவான கூலியால் கொப்பையும்பட்டியில் நெசவாளர்கள் பலரும் தொழிலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். வெளியூரிலிருந்து பாவு கொண்டு வந்து சேலை உற்பத்தி செய்தால் கூடுதல் செலவாகிறது. இதனால் இத்தொழிலை பலரும் கை விட்டுள்ளனர். கைத்தறி அமைத்தல், மறுசீரமைப்பு போன்ற தொழில்நுட்பங்களை கற்றுத்தரவும் நெசவாளர்கள் இல்லை. இதனால் மாவட்டத்தில் அழியும் தொழில்களில் கைத்தறி நெசவுத் தொழில் முக்கிய இடத்தில் உள்ளது என்றனர்.