ADDED : ஜன 28, 2024 06:58 AM
பெரியகுளம்: பெரியகுளம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (ஜன.29) காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., முத்து மாதவன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, பெரியகுளம் வேளாண் உதவி இயக்குனர் ரேணுகா தெரிவித்தார்.