/உள்ளூர் செய்திகள்/தேனி/ பச்சை மிளகாய் கிலோ ரூ.110க்கு விற்பனை பச்சை மிளகாய் கிலோ ரூ.110க்கு விற்பனை
பச்சை மிளகாய் கிலோ ரூ.110க்கு விற்பனை
பச்சை மிளகாய் கிலோ ரூ.110க்கு விற்பனை
பச்சை மிளகாய் கிலோ ரூ.110க்கு விற்பனை
ADDED : செப் 01, 2025 07:23 AM

பெரியகுளம் : கேரளாவில் ஓணம் பண்டிகை கால தேவை அதிகரித்துள்ள நிலையில், விளைச்சல் பாதித்து வரத்து குறைந்ததால் தேனி மாவட்டத்தில் பச்சை மிளகாய் கிலோ ரூ.110க்கு விற்பனையானது.
இம்மாவட்டத்தில் பச்சைமிளகாய் பெரியகுளம் தாலுகா, சின்னமனுார் பகுதிகளில் சாகுபடியாகிறது. இரண்டு மாதங்களில் தினமும் 10 முதல் 15 டன் அறுவடைக்கு கிடைக்கும். இவ்வாறு விளையும் பச்சை மிளகாய் சிப்பங்களில் நிரப்பப்பட்டு 30க்கும் அதிகமான காய்கறி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த மாதம் கிலோ ரூ.35க்கு விற்பனையான பச்சை மிளகாய், அதீத வெப்பம், வெயிலின் தாக்கம் காரணமாக செடிகளில் அதிகளவில் பூக்கள் உதிர்வதால், விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் 15 டன் உற்பத்தி 7 டன் என குறைந்தது. ஆவணியில் அதிக முகூர்த்தம், கேரள மாநில ஓணம் பண்டிகை தேவை அதிகரித்த நிலையில் விலை அதிகரித்துள்ளது.
வடுகபட்டி காய்கறி வியாபாரி ஆனந்தன் கூறுகையில்,'' பச்சை மிளகாய் கடந்த மாதம் கிலோ ரூ.35க்கு விற்பனையானது. வரத்து குறைவு தேவை அதிகரிப்பால் தற்போது கிலோ ரூ.110க்கு விற்பனையாகிறது. 2020ல் இந்த விலைக்கு விற்றது குறிப்பிடத்தக்கது'' என்றார்.