/உள்ளூர் செய்திகள்/தேனி/மழையால் திராட்சை விலை சரிவு: விவசாயிகள் கவலை மழை காலங்களில் திராட்சாப்பிடலாம்மழையால் திராட்சை விலை சரிவு: விவசாயிகள் கவலை மழை காலங்களில் திராட்சாப்பிடலாம்
மழையால் திராட்சை விலை சரிவு: விவசாயிகள் கவலை மழை காலங்களில் திராட்சாப்பிடலாம்
மழையால் திராட்சை விலை சரிவு: விவசாயிகள் கவலை மழை காலங்களில் திராட்சாப்பிடலாம்
மழையால் திராட்சை விலை சரிவு: விவசாயிகள் கவலை மழை காலங்களில் திராட்சாப்பிடலாம்
ADDED : ஜன 07, 2024 07:08 AM
கம்பம்: தொடர் மழையால் திராட்சைக்கு விலை இல்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாகவே கம்பம் பள்ளத்தாக்கில் சாரல் மழை தொடர்கிறது. சில நாட்களாக மாலையில் துவங்கி இரவில் கனமழை பெய்கிறது.
இப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது. ஒடைப்பட்டி பகுதியில் மட்டும் விதையில்லா திராட்சை மற்ற பகுதிகளில் பன்னீர் திராட்சையும் சாகுபடியாகிறது. மழை, பனி காலங்கள் திராட்சையில் நோய் தாக்கம் இருக்கும். குறிப்பாக மழையில் திராட்சை பழம் வெடித்து உதிர்ந்து விடும். மார்க்கெட்டிற்கு வரத்து நன்றாக இருந்த போதும் விலை சரிவை நோக்கி செல்கிறது. தற்போது கிலோ ரூ.15 முதல் 20 வரை விற்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.80 வரை போனது.
மழையை காரணம் காட்டியும், விதையில்லா திராட்சையும் வரத்து துவங்கியதால் விலை குறைந்து விட்டதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
திராட்சை சாகுபடியாளர்கள் கூறுகையில், மழை காலங்களில் நுகர்வு குறைவாகத் தான் இருக்கும். அதையே காரணம் காட்டி விலையை மிக குறைத்துவிட்டனர் என்கிறார். விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது தொடர்பாக திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையா கூறுகையில், ஆண்டிற்கு இரண்டு அறுவடை செய்ய வலியுறுத்துகிறோம். பனி காலங்களில் அறுவடையை தவிர்க்க வேண்டும்.
மழையில் நனைந்து பழங்கள் உடைப்பு ஏற்படும் போது ஒரு வித பூஞ்சான் பழத்திற்குள் சென்றுவிடும். அதுவே உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
பொதுவாக திராட்சை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மழை, பனி காலங்களிலும் சாப்பிடலாம் என்றார்