ADDED : பிப் 11, 2024 01:51 AM
தேனி: மாவட்டத்தில் 22,850 எக்டேர் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. பழைய தென்னந்தோப்புகளை புனரமைத்தல் புது நடவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் மாவட்டத்தில் 200 எக்டேருக்கு ரூ.89.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 வட்டாரத்திற்கும் தலா 25 எக்டேர் தேர்வு செய்யப்பட உள்ளது. பூச்சி தாக்குதலால் பாதித்து காய்ப்பு குறைந்த தென்னை மரங்களை கண்டறியும் பணி நடக்கிறது. பாதித்த தென்னை மரங்களை மாவட்ட கண்காணிப்பு குழு ஒப்புதல் பெற்று ஒரு மரத்தை அகற்ற ரூ.1000 மானியமும், எக்டேருக்கு அதிகபட்சம் ரூ.32 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. அரசு தென்னை நாற்றங்காலில் உற்பத்தி செய்த தென்னங்கன்றுகளை நடவு செய்ய எக்டேருக்கு ரூ.4ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் எக்டேருக்கு முதலாண்டு ரூ.44,750ம், 2ம் ஆண்டு ரூ.8750 என மொத்தம் ரூ.53,500 மானியம் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 4 எக்டேர் வரை மானியம் வழங்கப்படும். கம்பம் பள்ளதாக்கில் கேரளா வாடல் நோயால் பாதித்த தென்னை விவசாயிகள் பயனடையுமாறு தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.