/உள்ளூர் செய்திகள்/தேனி/சுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளிசுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி
சுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி
சுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி
சுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி

பராமரிப்பு
அம்பிகா, தலைமை ஆசிரியை: சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம். சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு மரக்கன்றுகளின் பயன்களையும் அதன் அவசியத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளியிலேயே விதைகளை கொடுத்து மாணவர்களே நட்டு வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார்கள். அவரவர் மரக்கன்றுகளுக்கு அவர்களே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். காலையில் பள்ளிக்கு வரும்போது மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிய பிறகுதான் வகுப்பறைக்குள் வரும் அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம்., என்றார்.
சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு
அழகேசன், ஆசிரியர்: பள்ளியில் 50 ஆண்டுகள் வயதுடைய வேம்பு, 13 ஆண்டுகள் ஆன நாவல் மரத்திலிருந்து விழும் விதைகளையும் சேகரித்து விதைப் பந்துகள் உருவாக்க மாணவர்களை பள்ளியின் சார்பாக ஊக்கப்படுத்தி வருகின்றோம். காலை நேரத்தில் தாவரங்களின் பெயர்களையும் மூலிகை தன்மையையும் தினந்தோறும் எடுத்துரைத்து வருகின்றோம்.