/உள்ளூர் செய்திகள்/தேனி/ஒட்டு ரக நெல்லில் குலைநோய் தாக்குதல்: விவசாயிகள் அவதிஒட்டு ரக நெல்லில் குலைநோய் தாக்குதல்: விவசாயிகள் அவதி
ஒட்டு ரக நெல்லில் குலைநோய் தாக்குதல்: விவசாயிகள் அவதி
ஒட்டு ரக நெல்லில் குலைநோய் தாக்குதல்: விவசாயிகள் அவதி
ஒட்டு ரக நெல்லில் குலைநோய் தாக்குதல்: விவசாயிகள் அவதி
ADDED : ஜன 06, 2024 06:41 AM
கம்பம்: கம்பத்தில் நடவு செய்துள்ள வீரிய ஒட்டுரக நெல்லில் குலை நோய் தாக்குதல் காணப்படுகிறது. பயிரின் வளர்ச்சி குன்றியுள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. லோயர்கேம்பில் ஆரம்பித்து பழனிசெட்டிபட்டி வரை நெல் சாகுபடி நடைபெறுகிறது. நோய் தாக்காது, அதிக மகசூல் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி கார்ப்பரேட் நிறுவனங்களின் வீரிய ஒட்டு ரக நெல் விதைகளை அதிக விலை கொடுத்து வாங்கி நடவு செய்கின்றனர். வேளாண் துறையினர் விதை நெல் விற்பனை செய்தாலும், பரிந்துரைகள் செய்தாலும் கேட்பதில்லை. கடைகளில் வீரிய ஒட்டு ரக விதை நெல் வாங்கி நடவு செய்கின்றனர்.
கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் ரோட்டில் சாகுபடி செய்யப்படுள்ள வீரிய ஒட்டு ரக பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகம் உள்ளது . இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வயல்களை ஆய்வு செய்து குலைநோயை கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண் துறையினர் விளக்கிட வேண்டும். வேளாண் அலுவலர் விஷ்ணு தலைமையிலான குழுவினர் வயல்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.