ADDED : மார் 23, 2025 06:47 AM
தேனி : வீரபாண்டியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர்செல்லப்பாண்டி, பொருளாளர் பத்மநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக விமல், செயலாளராக முத்துராஜ், பொருளாளராக சார்லஸ்ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்