ADDED : பிப் 06, 2024 12:29 AM
தேவதானப்பட்டி : சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி சமையலறையில் ஒருசிலிண்டர், 300 முட்டைகள் திருடு போனது.
பெரியகுளம் வடக்கு பாராஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த டேவிட் அண்ணாதுரை மனைவி கார்த்திக தீபா 39.
இவர் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்து சமையலுக்கு தேவையான பொருட்களை, சமையலருக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு மதியம் 2:00 மணிக்கு அறையை பூட்டிவிட்டு செல்வது வழக்கம். பிப்.3ல் 2750 அரிசி முட்டைகளை இறக்கி வைத்ததை கணக்கிட்டு அறையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை வந்தபோது அறையின் பூட்டு திறக்கப்பட்ட நிலையில், சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு சிலிண்டர்-1, 300 முட்டைகள் திருடு போயிருந்தது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., முருகேசன் விசாரணை செய்து வருகிறார்.