ADDED : ஜன 03, 2024 06:52 AM
கடமலைக்குண்டு: முன்னாள் ராணுவ வீரர்கள், வீரமங்கைகள் நலச் சங்கம், தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் மயிலாடும்பாறையில் நடந்தது.
டாக்டர் சோமாஸ்கந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை பவுன், தேனி வைகை ஜவான் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.