/உள்ளூர் செய்திகள்/தேனி/துப்பாக்கியால் மிரட்டல் முன்னாள் வீரர் கைதுதுப்பாக்கியால் மிரட்டல் முன்னாள் வீரர் கைது
துப்பாக்கியால் மிரட்டல் முன்னாள் வீரர் கைது
துப்பாக்கியால் மிரட்டல் முன்னாள் வீரர் கைது
துப்பாக்கியால் மிரட்டல் முன்னாள் வீரர் கைது
ADDED : ஜன 03, 2024 11:01 PM

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் பெரியகுளம், மேல்மங்கலத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சடையாண்டி, 48. கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் தனியார் காஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். விடுமுறையில் மேல்மங்கலம் வந்திருந்தார்.
இதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகேந்திரன், மது போதையில் சடையாண்டி வீட்டருகே அவதுாறாக பேசிக் கொண்டிருந்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த சடையாண்டியின் மனைவி செல்வராணி, அதை கண்டித்தார்.
அப்போது வெளியே வந்த சடையாண்டியை, மகேந்திரன் கையில் வைத்திருந்த லைசென்ஸ் உள்ள கைத்துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகார் படி, மகேந்திரனை எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை மற்றும் போலீசார் கைது செய்தனர்.