/உள்ளூர் செய்திகள்/தேனி/ பசுமை சூழலை அதிகரிக்க வனத்துறை தீவிரம்; மரக்கன்றுகளை இலவசமாக தந்து விழிப்புணர்வு பசுமை சூழலை அதிகரிக்க வனத்துறை தீவிரம்; மரக்கன்றுகளை இலவசமாக தந்து விழிப்புணர்வு
பசுமை சூழலை அதிகரிக்க வனத்துறை தீவிரம்; மரக்கன்றுகளை இலவசமாக தந்து விழிப்புணர்வு
பசுமை சூழலை அதிகரிக்க வனத்துறை தீவிரம்; மரக்கன்றுகளை இலவசமாக தந்து விழிப்புணர்வு
பசுமை சூழலை அதிகரிக்க வனத்துறை தீவிரம்; மரக்கன்றுகளை இலவசமாக தந்து விழிப்புணர்வு

குறுங்காடு
கி.சந்தியா, ரேஞ்சர், மண்வளப் பாதுகாப்பு சரகம், சின்னமனுார் : மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு காலநிலை மாற்றத்திற்கான தமிழக உயிர்ப்பன்மை, பாதுகாப்பு, பசுமையாக்குதல் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தேனி, போடி, பெரியகுளம், மயிலாடும்பாறை, சின்னமனுார் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மாவட்டத்தை பசுமை போர்வைக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். அரசு மருத்துவமனையில் குறுங்காடு அமைத்துள்ளோம்.
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
லோகேந்திரராஜன், ஐயப்பா சேவா சங்கம், சின்னமனுார்: வீதிகளில் ஒதுங்கி நிற்கக்கூட மர நிழல் இல்லாத நிலை உள்ளது. கிடைக்கும் காலி இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க முயற்சி செய்ய உள்ளேன். ஐயப்பா சேவா சங்கத்தில் உள்ளவர்களையும் இதில் இணைத்து மாதம் ஒரு நாள் மரக் கன்றுகள் நடவு செய்வது என்று முடிவு செய்துள்ளேன். வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் தருகின்றனர். அதிலும் பயனுள்ள பாதாம், நாவல் மரக்கன்றுகளை கண்மாய் கரைகளில் நடவு செய்தால், பலனும் கிடைக்கும். இப்போதைக்கு தலைவர்களின் பிறந்த நாள், வீடுகளில் நடக்கும் விசேஷ நாட்களில் மரக்கன்றுகளை தரவும் உள்ளோம். அனைவரும் சின்னமனூரை மாசில்லா நகராக மாற்ற முடியும். அதற்கான பணிகளை துவக்குவோம்., என்றார்.