/உள்ளூர் செய்திகள்/தேனி/குடியரசு தினத்தில் கும்பக்கரை அருவியில் கட்டணமின்றி குளிக்க வனத்துறை அனுமதிகுடியரசு தினத்தில் கும்பக்கரை அருவியில் கட்டணமின்றி குளிக்க வனத்துறை அனுமதி
குடியரசு தினத்தில் கும்பக்கரை அருவியில் கட்டணமின்றி குளிக்க வனத்துறை அனுமதி
குடியரசு தினத்தில் கும்பக்கரை அருவியில் கட்டணமின்றி குளிக்க வனத்துறை அனுமதி
குடியரசு தினத்தில் கும்பக்கரை அருவியில் கட்டணமின்றி குளிக்க வனத்துறை அனுமதி
ADDED : ஜன 25, 2024 06:00 AM
பெரியகுளம்: குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை கும்பக்கரை அருவில் சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி குளிக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியான வெள்ளகெவி, வட்டக்கானல் மலைப்பகுதி மற்றும் கும்பக்கரைஅருவி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் அருவியில் தண்ணீர் கொட்டுவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சின்ன குற்றாலம் எனவும் அழைக்கப்படுகிறது. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்., சுற்றுலா பயணி ஆண்கள் மது போதையாளர்கள் உள்ளே செல்ல தடுக்கும் வகையில் வாயில் ' மவுத்அனலைசர்' கருவியில் சோதனைக்கு பிறகு அனுப்பப்படுகின்றனர். குடியரசு தினவிழாவை முன்னிட்டு கட்டணம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என தேவதானப்பட்டி ரேஞ்சர் டேவிட் ராஜா தெரிவித்தார். கீழ வடகரை ஊராட்சியிலும் ஜன.26ல் வாகனங்களுக்கு கட்டண வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.