/உள்ளூர் செய்திகள்/தேனி/வைகை அணையில் மீன்கள் இருப்பு தாராளம்: நீர்மட்ட உயர்வால் பிடிபடும் அளவு குறைந்ததுவைகை அணையில் மீன்கள் இருப்பு தாராளம்: நீர்மட்ட உயர்வால் பிடிபடும் அளவு குறைந்தது
வைகை அணையில் மீன்கள் இருப்பு தாராளம்: நீர்மட்ட உயர்வால் பிடிபடும் அளவு குறைந்தது
வைகை அணையில் மீன்கள் இருப்பு தாராளம்: நீர்மட்ட உயர்வால் பிடிபடும் அளவு குறைந்தது
வைகை அணையில் மீன்கள் இருப்பு தாராளம்: நீர்மட்ட உயர்வால் பிடிபடும் அளவு குறைந்தது
ADDED : பிப் 12, 2024 05:41 AM
வைகை அணை நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறை மூலம் மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. வளர்ந்த மீன்கள் அங்குள்ள மீனவர்கள் மூலம் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. கடந்தாண்டு வைகை அணையில் மீன் பிடிப்புக்கான குத்தகை தனியாருக்கு விடப்பட்டது.
வைகை அணை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற 120 பரிசல்களில் 240 மீனவர்கள் தற்போது மீன்களைப் பிடித்து ஒப்பந்ததாரிடம் கொடுத்து அதற்கான சம்பளம் பெற்றுச் செல்கின்றனர். வைகை அணை நீர்மட்டம் கடந்த சில மாதங்களாக 60 அடிக்கும் கூடுதலாக உள்ளது. காற்றின் வேகம் அதிகம் இருந்தாலும், நீர்மட்டம் அதிகம் இருந்தாலும் பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை குறையும்.
மீன்வளத் துறையினர் கூறியதாவது: வைகை அணை மீன்வளத்துறை மூலம் தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் விலைக்கு வாங்கப்பட்டு நீர்த்தேக்கத்தில் சில வாரங்கள் வளர்ப்புக்கு விடப்படும். தற்போது கட்லா, மிருகாள், ரோகு வகை வளர்ப்பு மீன்கள், இயற்கையாக உள்ள ஆறா, உழுவை, சொட்டைவாளை, கெண்டை வகை மீன்களும் உள்ளன. சராசரியாக தினமும் 300 முதல் 500 கிலோ அளவிலான மீன்கள் பிடிக்கப்படுகிறது. மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தம் தனியாருக்கு விடப்பட்ட பின் வைகை அணையில் கடந்த 7 மாதங்களில் 150 டன் அளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கட்லா, மிருகாள், ரோகு மீன்கள் அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்ட உயர்வால் பிடிபடும் அளவு குறைந்துள்ளது. அணையில் நீரின் அளவு குறையும்போது பிடிபடும் மீன்கள் அளவு அதிகமாகும்., என்றனர்.