/உள்ளூர் செய்திகள்/தேனி/பிப். 2ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு அறிவிப்புபிப். 2ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
பிப். 2ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
பிப். 2ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
பிப். 2ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
ADDED : ஜன 05, 2024 10:51 PM
கம்பம்:கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 2 ல் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக தேனி மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்குவதை மாற்றி காலமுறை ஊதியம் வழங்கவும், பணிக்கொடை ரூ. ஒரு லட்சம், ஒய்வூதியம் ரூ.5 ஆயிரம் கருவூலம் மூலம் வழங்கவும், ஊராட்சி செயலர்களின் பணி காலத்தினை கருத்தில் கொண்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கிடவும், வி. ஏ. ஓ.,க்களுக்கு நடத்துவது போல 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட்டாரத்திற்குள்ளேயே கவுன்சிலிங் நடத்தவும், கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊராட்சி பணியாளர்கள், செயலர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டும் வழங்கவில்லை.
அதனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி பிப். 2 ல் சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகம் முன் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடக்கிறது என்றார்.