ADDED : மே 10, 2025 07:35 AM
தேனி: தேனி ரத்தினம் நகர் செல்வவிநாயக கோயில் 6வது தெரு ஜோஸ்டின் 24, கல்லுாரி மாணவர்.
இவரது தந்தை தவரத்தினமணி ஆண்டிபட்டி தனியார் வங்கி கிளார்க் ஆக பணிபுரிகிறார். ஜோஸ்டின் 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து தேனி வந்தார்.
மே 6ல் இரவு டூவீலரை தவரத்தினமணி ஓட்ட, பின்னால் அமர்ந்த ஜோஸ்டின் தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள மருந்து கடைக்கு வந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர், ஓடடி வந்த டூவீலர் தவரத்தினமணி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்புறமாக மோதி விபத்து நடந்தது.
இதில் கீழே விழுந்த ஜோஸ்டின், அவரது தந்தை தவரத்தினமணிக்கு காயங்கள் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.