ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : மே 10, 2025 07:35 AM
தேனி: தேனி கோட்டைக்களம் வேல்முருகன் 53. இவர், தேனி நகராட்சிபிட்டராக பணி செய்கிறார்.மே 7ல் வேல்முருகனும், உடன் பணியாற்றும் புவன்குமார், விஜயகுமார்ஆகியோருடன் குறிஞ்சி நகரில் கண்காணித்துவந்தனர்.அப்போது குறிஞ்சி நகர் கவுசிக், வீட்டின் முன் உள்ள குழாயில், மோட்டார் பொருத்தி தண்ணீர் பிடித்தார்.
அதை பார்த்த பிட்டர் 'மோட்டார் அமைத்து தண்ணீர் எடுத்து எதுக்கு வீணாக்குறீங்க' எனக் கேட்டு, அலுவலகம் திரும்பினர்.அலுவலகத்தில் பணியில் இருந்த போது, கவுசிக் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும் அலுவலகத்தில்நுழைந்து, கைகளால் தாக்கி, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தனர். வேல்முருகன் புகாரில் இருவர் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.