ADDED : செப் 07, 2025 03:37 AM
போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டி கோயில் மரத்து தெருவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி 20.
இவரது கணவர் வினோத்குமார் 28. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வினோத் குமார் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பிரியதர்ஷினி கண்டித்துள்ளார். அதையும் கேட்காமல் தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த மாதம் கணவரை அச்சுறுத்துவற்காக வீட்டில் தூக்கிட்டு உள்ளார்.
இதனை பார்த்த கணவர் வினோத்குமார், பிரிதர்ஷினியை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். பிரியதர்ஷினி தந்தை பெருமாள் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.