ADDED : செப் 07, 2025 03:37 AM
தேனி: கோடங்கிபட்டி சவுடம்மன் கோயில் தெரு சரவணன் 51, சில்லரை வியாபாரி.
இவர் போடி சென்று கோடாங்கிபட்டிக்கு டூவீலரில் திரும்பினார்.
தீர்த்த தொட்டி முருகன் கோயில் அருகே வந்த போது உடுமலைப்பேட்டை காளீஸ்வரராஜ் ஓட்டி வந்த கார் சரவணன் டூவீலரில் மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த சரவணன் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.