/உள்ளூர் செய்திகள்/தேனி/குறைதீர் கூட்டத்தை தேனியில் நடத்துங்கள் விவசாயிகள் வலியுறுத்தல்குறைதீர் கூட்டத்தை தேனியில் நடத்துங்கள் விவசாயிகள் வலியுறுத்தல்
குறைதீர் கூட்டத்தை தேனியில் நடத்துங்கள் விவசாயிகள் வலியுறுத்தல்
குறைதீர் கூட்டத்தை தேனியில் நடத்துங்கள் விவசாயிகள் வலியுறுத்தல்
குறைதீர் கூட்டத்தை தேனியில் நடத்துங்கள் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 24, 2024 04:02 AM
உத்தமபாளையம், : விவசாயிகள் குறை தீர் கூட்டத்தை தேனியில் மட்டுமே நடத்த வேண்டும் என்று நேற்று உத்தமபாளையத்தில் நடைபெற்ற லிவ சாயிகள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்ற லிவசாயிகள் வலியுறுத்தினர்.
உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்சி மைய கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. டி.ஆர். ஒ ஜெயபாரதி தலைமை வகித்தார். கூட்டத்தில் சின்னமனூரில் உலர் களம் அமைக்க வேண்டும். சின்ன வாய்க்காலில் கான்கிரீட் பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராஜா பேசினார். மலை மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும். தீவனம் இல்லாமல் மலைமாடுகள் பசியால் வாடுகிறது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாமதம் இன்றி உரிய காலத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பேசினர். மாவட்ட விவசாய சங்க தலைவர் பாண்டியன், சின்னமனூர் விவசாயி ராஜா உள்ளிட்ட பலர் பேசுகையில் ' விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை எப்போதும் போல் தேனி கலெக்டர் அலுவலத்திலேயே நடத்த வேண்டும். மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தவதால் விவசாயிகளுக்கு பயண நேரம் அதிகரித்து பெரும் அலைச்சலாக உள்ளது என வலியுறுத்தினர்.இந்த கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம், துணை இயக்குநர்கள் தனலட்சுமி, தேன்மொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி வேளாண் உதவி இயக்குநர்கள் பங்கேற்றனர்,