ADDED : பிப் 24, 2024 04:05 AM

தேனி : தேனி பழைய பள்ளி வாசல் செல்லும் ரோட்டின் சந்திப்பில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், டில்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தில் தடியடி, கண்ணீர் புகை வீசி, போராட்டத்தில் ஈடுபட்டு, உயிரிழந்த 22 வயது வாலிபரின் மரணத்திற்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
விவசாய விடுதலை முன்னணி நிர்வாகி செல்வராஜ், இந்திய கம்யூ., விவசாயி சங்க நிர்வாகி மணவாளன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.