/உள்ளூர் செய்திகள்/தேனி/நிலம் வாங்க வந்தவரிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி: இடைதரகர் கைதுநிலம் வாங்க வந்தவரிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி: இடைதரகர் கைது
நிலம் வாங்க வந்தவரிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி: இடைதரகர் கைது
நிலம் வாங்க வந்தவரிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி: இடைதரகர் கைது
நிலம் வாங்க வந்தவரிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி: இடைதரகர் கைது
ADDED : ஜன 01, 2024 06:17 AM
மூணாறு,: நிலம் வாங்குதற்கு முன் பணத்துடன் வருமாறு கூறி ரூ.8 லட்சத்தை பறித்துச் சென்ற இடை தரகர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா கொல்லம் சக்திகுளங்கரையைச் சேர்ந்தவர் மனுபாகுலேயன். இவர் மூணாறு மறையூர் ஆகிய பகுதிகளில் நிலம் வாங்க எண்ணினார். அதற்கு மூணாறு அருகே ஆனச்சால் பகுதியில் வசிக்கும் ஷிகாபுதீன் 41, அவரது நண்பர் ஷிபு ஆகியோர் இடைதரகர்களாக செயல்பட்டனர். இந்நிலையில் மறையூரில் நிலம் இருப்பதாக கூறி முன்பணத்துடன் வருமாறு இருவரும் மனுபாகுலேயனிடம் கூறினர். அதனை உண்மை என எண்ணியவர் உறவினர் ஒருவருடன் டிச.,29ல் ரூ. 8 லட்சத்துடன் வந்தார். அத்தொகையை மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் வைத்து ஷிகாபுதீன், ஷிபு ஆகியோர் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து மனுபாகுலேயன் மூணாறு போலீசில் புகார் அளித்தார்.
மூணாறு எஸ்.ஐ. அஜேஷ் கே.ஜான் தலைமையில் போலீசார் மறையூரில் தலைமறைவாக இருந்த ஷிகாபுதீனை கைது செய்தனர். தலைமறைவான ஷிபுவை தேடி வருகின்றனர்.