தப்பிய சிறை கைதி தற்கொலைக்கு முயற்சி
தப்பிய சிறை கைதி தற்கொலைக்கு முயற்சி
தப்பிய சிறை கைதி தற்கொலைக்கு முயற்சி
ADDED : பிப் 11, 2024 01:16 AM

போடி:தேனி மாவட்டம், கூடலுார், ஆங்கூர்பாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, 2023 டிச., 6ல் தென்னந்தோப்பில் கீரை பறித்த போது, அங்கு சென்ற சாமாண்டிபுரம் விஜயகுமார், 21, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ய முயற்சித்தார்.
பின், தப்பியோடிய அவரை, கூடலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், விசாரணைக்காக தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் பிப்., 1ல் ஆஜர்படுத்தப்பட்டார்.
'டீ குடிக்க வேண்டும்' என போலீசாரிடம் கூறி தப்பினார். அவர் தப்பிய வழக்கில் இரு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
போடி போலீசார் நேற்று முன்தினம் இரவு போடி புதுாரில் தன் சித்தப்பா வேலுச்சாமி வீட்டில் பதுங்கி இருந்த விஜயகுமாரை பிடித்தனர்.
அப்போது, அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றதாக அவர் கூறியுள்ளார். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த, 2019 செப்., 20ல் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விஜயகுமாருக்கு ஜன., 30ல் தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் 21 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.