புத்தகத்துடன் ஆங்கில புத்தாண்டு விழா
புத்தகத்துடன் ஆங்கில புத்தாண்டு விழா
புத்தகத்துடன் ஆங்கில புத்தாண்டு விழா
ADDED : ஜன 03, 2024 06:58 AM
கம்பம்: தமிழ்நாடு அறிவியல் இயக்க கம்பம் கிளையும், புத்துயிர் புத்தக மையமும் இணைந்து புத்தகத்தோடு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடத்தியது.
இந் நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க முன்னாள் மாநில செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன், நிர்வாகிகள் நித்தியானந்தன், முரளிதரன், திருக்குமரன், கவிதா, சங்கரேஸ்வரி, லட்சுமணகுமார் ஆகியோர் தாங்கள் வாசித்த ஒரு நூல் குறித்து பேசினார்கள். கம்பம் கிளை செயலாளர் திலீபன் ஒருங்கிணைத்தார். புத்துயிர் புத்தக மைய பொறுப்பாளர் தமீம் அன்சாரி நன்றி கூறினார்.