/உள்ளூர் செய்திகள்/தேனி/யானை தாக்கி பெண் பலி தொழிலாளர்கள் போராட்டம்யானை தாக்கி பெண் பலி தொழிலாளர்கள் போராட்டம்
யானை தாக்கி பெண் பலி தொழிலாளர்கள் போராட்டம்
யானை தாக்கி பெண் பலி தொழிலாளர்கள் போராட்டம்
யானை தாக்கி பெண் பலி தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : ஜன 11, 2024 04:06 AM
மூணாறு : காட்டு யானை தாக்கி பலியான பெண் தொழிலாளி பரிமளத்தின் உடலுடன் பன்னியாறு எஸ்டேட் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே பன்னியாறு எஸ்டேட்டில் இரு நாட்களுக்கு முன் காலை பணிக்குச் சென்ற தேயிலை தோட்டத் தொழிலாளி பரிமளம் 44, காட்டு யானை தாக்கி இறந்தார். அவரது உடலை பன்னியாறு எஸ்டேட் அலுவலகம் முன்பு வைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தோட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும். இறந்தவரின் மகளுக்கு வேலை, குடும்பத்திற்கு நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். தினமும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லும் முன்பு யானைகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் வாச்சர்களை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. சாந்தாம்பாறை ஊராட்சி தலைவர் லிஜூவர்க்கீஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உஷா குமாரி உள்பட தொழிற்சங்க பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
தோட்ட நிர்வாகத்தினர் தொழிற்சங்க பிரமுகர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களில் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்ததால் இரண்டரை மணி நேரம் நீடித்த போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர்.