/உள்ளூர் செய்திகள்/தேனி/ 10.5 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு 10.5 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
10.5 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
10.5 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
10.5 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
ADDED : ஜூன் 18, 2025 01:08 AM
தேனி:தேசிய அளவில் 10.5 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு(பி.எல்.ஓ.,க்கள்) நேரடி மற்றும் காணொலி மூலம் பயிற்சி வழங்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முக்கிய களப்பணியாளர்களாக பி.எல்.ஓ.,க்கள் உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஜூலை 2ல் சிறப்பு பயிற்சி வழங்க உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில் ' ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு இருவர் அல்லது மூவர் தேர்வு செய்து டில்லி நடைபெறும் பயிற்சியிலும், மற்றவர்கள் சட்டசபை தொகுதியில் காணொலி காட்சி பயிற்சியிலும் பங்கேற்கின்றனர். இதில் தேசிய அளவில் நேரடியாகவும், காணொலி மூலமும் 10.5 லட்சம் பி.எல்.ஓ.,க்கள் பங்கேற்கிறார்கள். வாக்காளர்களிடம் நேரடியாக சென்று தகவல் உறுதி செய்தல், மாற்றுத்திறனாளி விபரங்கள், உரிய முகவரியில் வாக்காளர் வசிப்பதை உறுதி செய்தல் போன்ற கணக்கெடுத்தல்பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றார்.
சூப்பர்வைசர்களுக்கு தேர்வு
கடந்த மாதம் பி.எல்.ஓ.,க்களின் சூப்பர்வைசர்கள் பயிற்சிக்காக டில்லி சென்று வந்தனர். அவர்களுக்கு ஜூன் 19ல் கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்களில் கணினி மூலம் தேர்வு நடக்கிறது. அருகில் உள்ள மாவட்டங்களை இணைத்து தமிழகத்தில் மொத்தம் 18 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.