ADDED : ஜூன் 17, 2025 07:03 AM
தேனி; தேனி உழவர் சந்தைக்கு வேளாண் விளைபொருட்களை கொண்டு வர உதவ வேண்டும் என துணை முதல்வர் உதயநிதியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
அதன்பேரில் ஜெயமங்கலம் விளைபொருட்களை தேனி கொண்டு வர வசதியாக ஜெயமங்கலத்தில் இருந்து பின்னத்தேவன்பட்டி, சொக்கத்தேவன்பட்டி, அன்னஞ்சி வழியாக தேனி உழவர் சந்தைக்கு பஸ் இயக்கப்பட்டது.
இன்று (ஜூன் 17) முதல் கடமலைக்குண்டுவில் இருந்து நாகலாபுரம் வழியாக தேனி உழவர் சந்தைக்கு பஸ் இயக்கப்பட உள்ளது.