/உள்ளூர் செய்திகள்/தேனி/மழைநீரை கடத்த கோயில் வளாகத்தில் வடிகால் வசதிமழைநீரை கடத்த கோயில் வளாகத்தில் வடிகால் வசதி
மழைநீரை கடத்த கோயில் வளாகத்தில் வடிகால் வசதி
மழைநீரை கடத்த கோயில் வளாகத்தில் வடிகால் வசதி
மழைநீரை கடத்த கோயில் வளாகத்தில் வடிகால் வசதி
ADDED : ஜன 05, 2024 05:31 AM
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் தேங்கும் மழைநீரை கடத்த ரூ.6 லட்சம் மதிப்பில் வடிகால் கட்டும் பணி துவங்கி உள்ளது.
ஹிந்துசமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.மழைகாலத்தில் கோயிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து ஹிந்துசமயஅறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றி வந்தனர்.
இந்நிலையில் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குஉட்பட்டஇப்பகுதியில் வடிகால் அமைக்க ஊராட்சி தலைவர் வேல்மணி, மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.