/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி மாவட்டத்தில் வரைவு ஓட்டுசாவடி பட்டியல்... வெளியீடு: 28 அமைவிடங்கள், 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்புதேனி மாவட்டத்தில் வரைவு ஓட்டுசாவடி பட்டியல்... வெளியீடு: 28 அமைவிடங்கள், 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் வரைவு ஓட்டுசாவடி பட்டியல்... வெளியீடு: 28 அமைவிடங்கள், 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் வரைவு ஓட்டுசாவடி பட்டியல்... வெளியீடு: 28 அமைவிடங்கள், 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் வரைவு ஓட்டுசாவடி பட்டியல்... வெளியீடு: 28 அமைவிடங்கள், 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு
ADDED : செப் 16, 2025 04:59 AM

தேனி: தேர்தல் ஆணைய உத்தரவின் படி தேனி மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு கூடுதலாக உள்ள ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட 28 அமைவிடங்கள், 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்துள்ளன.
ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகபட்சம் 1200 வாக்காளர்கள் வரை ஓட்டுபதிவு செய்யலாம். அதற்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அந்த ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கும் பணி முடிந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 563 அமைவிடங்களில், 1226 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போதைய கணக்கெடுப்பு, மறுவரையறுதல் பணிக்குப்பின் 591 அமைவிடங்களில் 1394 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28 அமைவிடங்கள், 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக பெரியகுளம்(தனி) தொகுதியில் 14 அமைவிடங்கள், 62 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்துள்ளது. ஆண்டிபட்டி தொகுதியில் ஒரு அமைவிடம் குறைந்துள்ளது.
மாவட்டத்தை சேர்ந்த 4752 பேர் ராணுவம், இதர பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதில் ஆண்டிபட்டி தொகுதியில் அதிகபட்சமாக 1465 பேர் உள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களாக 37 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் போடி தொகுதியில் 27 பேர் அதிகமாக பதிவு செய்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியிலை வெளியிட்டார். அரசியல் கட்சியினர் பட்டியலை பெற்றுக்கொண்டனர். கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், சட்டசபை தொகுதி வாரியாக உதவி தேர்தல் அலுவலர்கள் ரஜத்பீடன், சையது முகமது, மாரிசெல்வி, சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். அரசியல் கட்சியினர் ஒரு சில வார்டுகளில் 1190க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்க வேண்டும் என கோரினர். ஓட்டுப்பதிவை பொறுத்து, தேர்தல் ஆணைய உத்தரவின் படி பிரிக்க வாய்ப்புள்ளது அதிகாரிகள் என்றனர்.
நிகழ்ச்சியை தேர்தல் தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் ராஜா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்வில் தாசில்தார்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஓட்டுப்பெட்டிகள் வைப்பறை அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
(அட்டவணை)தொகுதி/ ஆண்கள்/ பெண்கள்/இதரர்/ அமைவிடங்கள்/ஓட்டுச்சாவடிகள். ஆண்டிபட்டி/ 1,36,581/1,41,946/35/ 171/344/பெரியகுளம்(தனி)/1,41,152/1,48,045/120/ 132/359/போடி/ 1,34,263/1,42,467/18/ 159/346/கம்பம்/ 1,37,215/1,46,004/27/ 129/345/மொத்தம்/5,49,211/5,78,462/200/ 591/1394/