ADDED : செப் 16, 2025 04:59 AM
பெரியகுளம்: பெரியகுளம் பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
தி.மு.க., நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். சரவணக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், எம்.பி.,தங்கத்தமிழ்செல்வன், நகராட்சி தலைவர் சுமிதா மாலை அணிவித்தனர். பின் உறுதிமொழி ஏற்றனர். பெரியகுளம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் எ.புதுப்பட்டியில் தி.மு.க., மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா தலைமையில் மாலை அணிவித்தனர். ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் பழனியப்பன், மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு முன்னிலையில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் நகர செயலாளர் அப்துல்சமது தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, ஆண்டி முன்னிலையில் மாலை அணிவித்தனர். அ.ம.மு.க., சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், ராமசாமி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் சையது அபுதாஹிர், நகர செயலாளர்கள் குபேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.