/உள்ளூர் செய்திகள்/தேனி/தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவு மவுனஅஞ்சலி ஊர்வலம்தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவு மவுனஅஞ்சலி ஊர்வலம்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவு மவுனஅஞ்சலி ஊர்வலம்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவு மவுனஅஞ்சலி ஊர்வலம்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவு மவுனஅஞ்சலி ஊர்வலம்
ADDED : ஜன 05, 2024 05:15 AM

தேனி : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தேனியில் அனைத்து கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.
பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோவிலில் துவங்கி நேருசிலை வரை ஊர்வலம் சென்றது.
ஊர்வலத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முகமது, அவைத்தலைவர் மாயி, தேனி நகர செயலாளர் முருகராஜா, மகளிரணி மாவட்ட செயலாளர் சந்திரமதி, அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பன்னீர்செல்வம் அணி சையதுகான், தி.மு.க., நகரசெயலாளர் நாராயணபாண்டி, அ.ம.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, ஹிந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று தே.மு.தி.க., கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சிலர் மொட்டை அடித்துக் கொண்டனர்.