/உள்ளூர் செய்திகள்/தேனி/வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 12, 2024 05:40 AM
தேனி: தேனி கொடுவிலார்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட நிர்வாகி அன்னலட்சுமி தலைமை வகித்தார். 'விடுமுறை, இரவு நேர ஆய்வுகளை கண்டித்து பிப்.,12 மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்வது, அனைத்து நிலை அலுவலர்களின் ஆய்வு கூட்டங்களை முறைப்படுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணிபுரியும் உதவிப் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.' என்பன, உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் தாமோதரன், துணைத் தலைவர் சின்னச்சாமி, மகளிர் ஒருங்கிணைப்பாளர் பேபி, நிர்வாகிகள் செல்லராஜா, முனிராஜ், சக்தி திருமுருகன், ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.