/உள்ளூர் செய்திகள்/தேனி/ கலெக்டர் அலுவலகம் முன் பேனர்கள் வைப்பதில் போட்டி ரோடு சந்திப்புகளில் இடையூறு கலெக்டர் அலுவலகம் முன் பேனர்கள் வைப்பதில் போட்டி ரோடு சந்திப்புகளில் இடையூறு
கலெக்டர் அலுவலகம் முன் பேனர்கள் வைப்பதில் போட்டி ரோடு சந்திப்புகளில் இடையூறு
கலெக்டர் அலுவலகம் முன் பேனர்கள் வைப்பதில் போட்டி ரோடு சந்திப்புகளில் இடையூறு
கலெக்டர் அலுவலகம் முன் பேனர்கள் வைப்பதில் போட்டி ரோடு சந்திப்புகளில் இடையூறு
ADDED : ஜூன் 15, 2025 12:19 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் விளம்பர பேனர்கள் வைப்பதில் அரசுத்துறைகள் இடையே 'போட்டா போட்டி' நிலவி வருகிறது.விபத்து ஏற்படுத்தும் வகையில் ரோடு சந்திப்புகளில் பேனர்கள் ஆக்கிரமித்துள்ளன.
தேனியில் ரோட்டோரம், பொது இடங்கள், சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக 'மெகா சைஸ்' விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்கிறது. விளம்பர பேனர்கள் வைப்போர் உள்ளாட்சி, போலீசாரிடம் உரியஅனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தியும், அந்த விதிகளை தற்போது பின்பற்றப்படுவது இல்லை.அவ்வப்போது போலீசார் சிலர் மீது வழக்கு பதிந்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் அதை கண்டு கொள்வதில்லை.
இதனால் தேனி -- பெரியகுளம் ரோட்டில் பல இடங்களில் ரோடு சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களால் விபத்துக்கள் தொடர்கிறது.
பேனர் வைக்கும் இடமாகும் கலெக்டர்அலுவலகம்:தற்போது அரசுத்துறைகள் திட்டங்களை பொதுமக்களுக்கு விளம்பரம்செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுத்துறைகள் சார்பில் பல இடங்களில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலக நுழைவாயில், வளாகத்தில் டூவீலர்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றில் பேனர்கள் வைக்க அரசு துறைகள் இடையோ' போட்டா போட்டி' நிலவுகிறது.
இதனால் கலெக்டர் அலுவல நுழைவாயில் விளம்பர பேனர்கள் மயமாக காணப்படுகிறது. இதுதவிர ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் அரசியல்கட்சியினர், பல அமைப்புகள் லெக்டர் அலுவலக நுழைவாயிலை பேனர் வைக்கும் இடமாக மாற்றி வருகின்றனர்.