/உள்ளூர் செய்திகள்/தேனி/ எல்.ஐ.சி., முகவர் வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு எல்.ஐ.சி., முகவர் வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
எல்.ஐ.சி., முகவர் வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
எல்.ஐ.சி., முகவர் வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
எல்.ஐ.சி., முகவர் வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
ADDED : ஜூன் 14, 2025 06:15 AM
தேனி: தேனி பென்னிகுவிக் நகர் சோலை மலை அய்யனார் கோயில் தெரு எல்.ஐ.சி., முகவர் முத்துகிருஷ்ணன் 53. இவர் வீட்டில் உள்ள இரும்பு பீரோவைபூட்டி, சாவியை மற்றொரு பீரோவில் வைத்தார்.
வீட்டின் முன் கதவை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் ஆண்டிபட்டியில் உள்ள உறவினரின் விசேஷத்திற்கு சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்புற இரும்பு கேட், மரக்கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3.97 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.55 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.