/உள்ளூர் செய்திகள்/தேனி/கூடலுாரில் உலா வரும் நோய் தாக்கிய நாய்கள்கூடலுாரில் உலா வரும் நோய் தாக்கிய நாய்கள்
கூடலுாரில் உலா வரும் நோய் தாக்கிய நாய்கள்
கூடலுாரில் உலா வரும் நோய் தாக்கிய நாய்கள்
கூடலுாரில் உலா வரும் நோய் தாக்கிய நாய்கள்
ADDED : ஜன 08, 2024 05:00 AM

கூடலுார், : கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் மெயின் பஜார், நடுத்தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, சுக்காங்கல்பட்டி, அரசமரம் பஸ் ஸ்டாப், எல்.எப்.,ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகம். நாய்கள் கடித்ததில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருத்தடை முகாம் நடத்தி நாய்களை கட்டுப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நோய் தாக்கிய நாய்கள் தற்போது அதிகம் உலா வரத் துவங்கி உள்ளன.
இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.