/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பம், சின்னமனுாரில் முடங்கிய சிசிடிவி கேமராக்கள்கம்பம், சின்னமனுாரில் முடங்கிய சிசிடிவி கேமராக்கள்
கம்பம், சின்னமனுாரில் முடங்கிய சிசிடிவி கேமராக்கள்
கம்பம், சின்னமனுாரில் முடங்கிய சிசிடிவி கேமராக்கள்
கம்பம், சின்னமனுாரில் முடங்கிய சிசிடிவி கேமராக்கள்
ADDED : பிப் 25, 2024 05:08 AM
கம்பம் : கம்பம், சின்னமனூர் நகரங்களில் போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர தேனி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபமாக சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. குறிப்பாக கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளின் புலனாய்வுக்கு பெரிதும் உதவி வருகிறது. அனைத்து வழக்குகளிலும் போலீசாருக்கு கை கொடுப்பது சிசிடிவி கேமராக்களாகும். கைரேகை, மோப்பநாய் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே கடைக்காரர்கள், குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
கம்பம், சின்னமனூர் நகரங்களில் மெயின் ரோடு, கம்பமெட்டு ரோடு, பார்க் ரோடு சந்திப்பு, சீப்பாலக் கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் போலீசார் பொருத்தி உள்ளனர். ஆனால் கடந்த பல மாதங்களாகவே பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. பழுதடைந்து பல மாதங்களாகி விட்டது. கம்பம்,சின்னமனூர் போலீசார் சிசிடிவி கேமராக்கள் பற்றி கவலைப்படுவதில்லை. பெரும்பாலான கடைக்காரர்கள் கேமராக்கள் பொருத்தி இருப்பதால் அதை பயன்படுத்தி கொள்ளலாம் என போலீசார் நினைக்கின்றனர்.
போலீசார் ஏதாவது பெரிய அசம்பாவிதம் நடக்கும் போது தான் சிசிடிவி கேமராக்கள் நினைவிற்கு வருகிறது.
மற்ற நாட்களில் கேமராக்கள் பற்றி கண்டுகொள்வதில்லை, கம்பம், சின்னமனூர் நகரங்களில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை பழுது நீக்கி, போலீசாருக்கு பயன்படும்படி செய்ய எஸ்.பி. சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.