/உள்ளூர் செய்திகள்/தேனி/ரோட்டில் கழிவு நீர் செல்லும் அவலம் கம்பத்தில் பக்தர்கள் முகம் சுளிப்புரோட்டில் கழிவு நீர் செல்லும் அவலம் கம்பத்தில் பக்தர்கள் முகம் சுளிப்பு
ரோட்டில் கழிவு நீர் செல்லும் அவலம் கம்பத்தில் பக்தர்கள் முகம் சுளிப்பு
ரோட்டில் கழிவு நீர் செல்லும் அவலம் கம்பத்தில் பக்தர்கள் முகம் சுளிப்பு
ரோட்டில் கழிவு நீர் செல்லும் அவலம் கம்பத்தில் பக்தர்கள் முகம் சுளிப்பு
ADDED : ஜன 13, 2024 03:58 AM

கம்பம் : கம்பம் மெயின்ரோட்டில் சாக்கடை கழிவு நீர் வழித்தோடுவதால் சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
கம்பம் தியாகி வெங்கடாச்சலம் தெருவில் உள்ள சாக்கடை, மெயின் ரோட்டில் காந்தி சிலை அருகில் உள்ள பாலம் அடைத்து கொண்டதால், சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ஒரு மாதமாக தேங்கி நிற்கும் இந்த கழிவு நீர் தற்போது மெயின்ரோட்டில் வழிந்தோடுகிறது.
சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர். நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் செல்லும் போது சாக்கடை கழிவு நீர் படுகிறது.
இரண்டு பக்கம் கடைகளில் இருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர், மெயின் ரோட்டில் துர்நாற்றம் வீசுகிறது. மெயின்ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீர் வ.உ.சி. திடல் வழியாக செல்கிறது. மெயின் ரோட்டில் சாக்கடை கழிவு நீர் வழிந்தோடுவதை நகராட்சி வேடிக்கை பார்த்து வருகிறது.
கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.