ADDED : ஜன 31, 2024 06:36 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் கணேசபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் ரித்திகா 10.
இவர் சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்திகா, ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது உறுதியானது. தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவக்குழுவினர் மற்றும் ஜெயமங்கலம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடித்தல், சாக்கடை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிர படுத்தப்பட்டன.