பளியன்குடி அருகே இறந்து கிடந்த மான்
பளியன்குடி அருகே இறந்து கிடந்த மான்
பளியன்குடி அருகே இறந்து கிடந்த மான்
ADDED : செப் 10, 2025 02:22 AM

கூடலுார் : கூடலுார், லோயர்கேம்ப் வனப்பகுதியில் மான்கள் அதிகம். நேற்று காலை பளியன்குடி அருகே வனப்பகுதியை ஒட்டி மான் இறந்து கிடப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து கூடலுார் ரேஞ்சர் பிரபாகரன் தலைமையிலான வனத் துறையினர் அப்பகுதிக்கு சென்றனர். சம்பவ இடத்திலேயே கால்நடை டாக்டர் ராம்பிரசாத் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் கூறும் போது, 'இறந்த மான் 4 வயதுடைய பெண் மான்.
நோய் தாக்கப்பட்டு இறந்துள்ளது. மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை வந்தபின் அதற்கான காரணங்கள் தெரியவரும் ' என்றார்.